முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது
- 12 செப்டெம்பர் 2020: தமிழகத்தில் செப்.30 வரை தளர்வுகளுடன் இ-பாஸ் இல்லாத பொது முடக்கம் நீட்டிப்பு
- 27 மே 2018: தூத்துக்குடி செய்தி இன்று
- 25 பெப்பிரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்
- 16 பெப்பிரவரி 2018: காவிரி நீரில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் ஆணை
- 6 பெப்பிரவரி 2018: நாட்டுபுறவியல் உதவி பேராசிரியர் பணி நாட்டுபுறவியல் மாணவர்களுக்கே
புதன், மே 7, 2014
முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆங்கிலேய ஆட்சிகாலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தனமாக இருந்த பகுதிகள் மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்டபோது மெட்ராஸ் பிரசிடென்சியிலிருந்து தனிமாநிலமாக மாறி கேரளா மாநிலமாக பிரிந்தது. அப்போது ஆங்கிலேய அரசு தமிழகப்பகுதிகளான கம்பம், தேனி, மதுரை போன்ற பகுதிகளுக்கு தண்ணீர் தேவையை தீர்த்துவைக்க 999 ஆண்டுகளுக்கான சட்டம் இயற்றப்பட்டு முல்லை பெரியாறு ஆற்றின் குறுக்கே அணையை கட்டிக்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 1895ம் ஆண்டு முல்லைப்பெரியாறு அணை கட்டப்பட்டது.
இந்தியா சுதந்திரம் அடைந்து கேரளா மாநிலமாக மாறியபின் 142 அடிகள் தண்ணீர் இருந்ததை அந்த அரசு 1979ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் குஜராத் மாநிலத்திலிருந்த மொர்பி அணை உடைந்து பலபேர் பலியானதை காரணம் காட்டி 136 அடியாக குறைத்தது. இதன் காரணமாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குதொடுத்து பலமுறை போராடி, தற்போது 2014ம் ஆண்டு 7ம் தேதி மே மாதம் தமிழகத்திற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மூலம்
[தொகு]- முல்லைப் பெரியாறு: கேரள அரசின் சட்டம் செல்லாது: உச்ச நீதிமன்றம், தினமணி, மே 7, 2014
- SC allows TN to increase Mullaperiyar water level, தி இந்து, மே 7, 2014