மேலதிக சிகிச்சைக்காக ரஜினிகாந்த் சிங்கப்பூர் பயணம்

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

சனி, மே 28, 2011

பிரபல தமிழ்த் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் சிறுநீரகப் பாதிப்புக்கு நவீன டயாலிசிஸ் சிகிச்சைபெற நேற்று வெள்ளிக்கிழமை இரவு சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார்.


ரஜினிகாந்த்

"தேசிய சிறுநீரக பவுண்டேஷன் சிங்கப்பூர்' மருத்துவமனையில் ரஜினிகாந்த் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற உள்ளார். இவருடன் இரண்டு மருத்துவ நிபுணர்களும், ரஜினியின் மனைவி லதா மற்றும் மகள் ஐஸ்வர்யாவும் உடன் சென்றனர்.


61 வயதான நடிகர் ரஜினிகாந்த் கடந்த மே 13 அன்று மூச்சுத் திணறல் மட்டும் காய்ச்சல் காரணமாக அன்று தமிழகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.


சிங்கப்பூரில் இருந்து சீக்கிரம் திரும்பி வந்துவிடுவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்குத் தெரிவித்துள்ளார். மருத்துவச் சிகிச்சைக்காக சிங்கப்பூருக்குப் புறப்படுவதற்கு முன்பு ரஜினி பேசி பதிவு செய்த சிறிய உரையை அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.


மூலம்[தொகு]

Bookmark-new.svg