ரன்வீர்சேனா அமைப்பின் 16 பேருக்கு தூக்குத்தண்டனை தீர்ப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், ஏப்பிரல் 8, 2010

பீகார் மாநிலம் சகன்னாபாத்தில் கடந்த 1997ஆம் ஆண்டு நடந்த படுகொலைகளுக்கு பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ரன்வீர்சேனா அமைப்பைச் சேர்ந்த 16 பேருக்கு பட்னா நீதிமன்றம் நேற்று புதன்கிழமை தூக்குத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.


முன்னதாக, நிலச்சுவான்களின் பாதுகாப்புப்படையாக செயல்பட்டுவரும் ரன்வீர்சேனா எனற அமைப்பினர் தலித் பொதுமக்கள் 58 பேரை 1997 டிசம்பர் 1 ஆம் நாள் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டது. கொல்லப்பட்டவர்களில் 27 பெண்களும் 10 சிறுவர்களும் அடங்குவர்.


இந்த வழக்கில், 10 பேரை நீதிமன்றம் விடுவித்துள்ளது. தூக்குத்தண்டனை விதிக்கப்பெற்றவர்கள் சிலரின் பிணையையும் உடனடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

மூலம்[தொகு]