லண்டனில் பல்லின இசைக்குழுவின் இசைநிகழ்ச்சி
- 5 ஏப்பிரல் 2016: பனாமா பேப்பர் விவகாரம் உலகின் அதிகாரமிக்கவர்களின் வரி ஏய்ப்பை காட்டியுள்ளது
- 23 திசம்பர் 2015: அண்டத்தின் அழகி பட்டம் தவறுதலாக பிலிப்பைன்சு அழகிக்கு பதில் கொலம்பியா அழகிக்கு தரப்பட்டது
- 9 ஏப்பிரல் 2015: கோவையில் பெப்ரவரி 2010 இல் ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு
- 1 ஏப்பிரல் 2015: பெரியார் பல்கலைக்கழகத்தில் நூறு மாணவர்கள் பங்கேற்ற விக்கியூடக மின் ஆவணவாக்கப் பயிலரங்கம்
- 25 மார்ச்சு 2015: சேலம் நடுவண் சிறையில் தமிழ்க்கணிமை, திறவூற்று மென்பொருள் பயிலரங்கம்
சனி, பெப்பிரவரி 22, 2014
பல்லின சமகால பாரம்பரிய இசைக்குழு (Ethnic Contemporary Classical Orchestra, எக்கோ) கிழக்கு லண்டனிலுள்ள வேத்தியர் விழா மண்டபத்தில் (Royal Festival Hall) நேற்று வெள்ளிக்கிழமை ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தியது. ரேச்சல் பாண்டின் இசைக்குழுவை வழிநடத்தினார். பிற்பகல் ஒரு மணிக்குத் தொடங்கி சுமார் ஒரு மணி நேரம் பல மொழிப் பாடல்கள் இசைக்கப்பட்டன.
இதில் பல இன சமூகங்களைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர் ஒன்று கூடி பலதரப்பட்ட வாத்தியங்களை வாசித்தனர்.
கருநாடக இசை வாத்தியமான மிருதங்கம் இந்த இசை நிகழ்ச்சியில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. காந்தன் என்ற லட்சுமிகாந்தன் தியாகராஜன் மிருதங்கம் வாசித்தார்.
எக்கோ இசைக்குழு 2009 ஆம் ஆண்டு மொரீசியோ வெனெகஸ்-அஸ்டோர்கா, ரேச்சல் பாண்டின் ஆகியோரால் தொடங்கப்பட்டது. இன்றைய இளைய சமுதாயத்தினரின் இசை அபிலாசைகளை பிரதிபலிக்கும் வகையில் பலதரப்பட்டதும் உள்ளடக்கக்கூடியதுமான ஒரு மாதிரி இளையவர் இசைக்குழுவை உருவாக்குவதே இவர்களின் குறிக்கோளாகும்.