உள்ளடக்கத்துக்குச் செல்

லிபியாவில் எரிபொருள் தாங்கி வெடித்ததில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

புதன், அக்டோபர் 26, 2011

லிபியாவின் முன்னாள் தலைவர் கடாபியின் ஆதரவுப் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி நகரமும், கடாபியின் பிறந்த இடமுமான செர்ட் நகரில் நேற்று எரிபொருள் தாங்கியொன்று வெடித்துச் சிதறியதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.


சம்பவம் நடந்த பகுதியில், எரிந்து, கருகிய உடல் சிதரிக் கிடந்ததாக ஊடகங்கள் தெரிவித்தன. கடாபியும், அவரது மகனும் சமீபத்தில் புரட்சிப் படையினரால் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டனர். அவர்களது உடல்களை நான்கு நாட்கள் காட்சிக்கு வைத்து பின்னர் அப்புறப்படுத்தினர். அவர்களது உடல்கள் இனம்தெரியாத ஒரு இடத்தில் புதைக்கப்பட்டதாக இடைக்கால அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையிலேயே சேர்ட் நகரில் உள்ள ஒரு எரிபொருள் தாங்கி வெடித்துச் சிதறியுள்ளது. மிகப் பெரிய சத்தத்துடன் எரிபொருள் தாங்கி வெடித்துச் சிதறியதாகவும், உடல்கள் சிதறிக் கிடப்பது பார்க்கவே கொடூரமாக இருப்பதாகவும் புரட்சிப் படையினர் தெரிவித்துள்ளனர். எரிபொருள் தாங்கி யாரேனும் வெடிகுண்டு வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


மூலம்

[தொகு]