வங்கத்தில் 1971 இன் போர்க்குற்ற நீதிமன்றம் அமைக்கப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, மார்ச்சு 26, 2010

வங்க தேச அரசு 1971 ஆம் ஆண்டு விடுதலைப் போராட்டக் காலத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை விசாரிப்பதற்காக சிறப்பு நீதிமன்றம் ஒன்றை அமைத்துள்ளது.


கிழக்கு பாகிஸ்தானாக இருந்து 1971ஆம் ஆண்டில் தனி நாடாக வங்கதேசம் பிரிந்து சென்றபோது நடத்தப்பட்ட விடுதலைப் போரின் போது பாகிஸ்தானுடன் தொடர்பு வைத்திருந்த வங்காள தேசத்தவர்கள் மீது இந்தச் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைகள் நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இப்போரின் போது கொலைகள், பாலியல் வன்புணர்வுகள் போன்ற குற்றங்கள் பெரிய அளவில் நடந்திருந்தன. அப்போதைய மேற்குப் பாகிஸ்தானின் இராணுவத்தினர் பெருமளவு வங்கதேசப் பொதுமக்களைக் கொன்று குவித்தார்கள். மில்லியன் கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறினர்.


அங்கு இராணுவத்தினர் தனித்து இக்குற்றங்களைப் புரியவில்லை. பல உள்ளூர் பொதுமக்கள், குறிப்பாக ஜமாத்-இ-இசுலாமி கட்சி உறுப்பினர்கள் இராணுவத்தினருக்குத் துணை போனார்கள்.

துணை இராணுவக் குழு ஒன்றை அமைத்து அவர்கள் மூலம் இக்கொலைகள் மேற்கொள்ளப்பட்டன. 9 மாதங்களாக நடந்த இந்த விடுதலைப் போராட்டத்தில் பாகிஸ்தானிய இராணுவத்தினர் உள்ளூர் உளவாளிகள் உதவியோடு சுமார் 30 லட்சம் பேரைக் கொன்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் மீது இப்போது வங்கதேச அரசு விசாரணைகளை மேற்கொள்ள இருக்கின்றது.


இவர்கள் தாங்கள் குற்றமமற்றவர்கள் என்றும், இவை அரசியல் பழிவாங்கலே என்றும் அவர்கள் கூறுகின்றனர்.


வங்கதேச உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் இந்த வழக்குகளை விசாரிப்பார்கள் என்று தெரிகிறது. 12 பேர் அடங்கிய வழக்கறிஞர் குழு இந்த வழக்குகளை நடத்தும்.

மூலம்[தொகு]