வங்காளதேசத்தில் இரு பேருந்துகள் மோதியதில் 20 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், திசம்பர் 7, 2009


வங்காளதேசத்தில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 20 பேர் கொல்லப்பட்டு குறைந்தது 45 பேர் காயமடைந்தனர்.


தலைநகர் டாக்காவின் தென்மேற்கேயுள்ளா பரித்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு வீதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.


இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வங்காளதேசத்தில் ஆண்டுதோறும் 4,000 பேர் வீதி விபத்துக்களில் இறப்பதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. வீதிகள் சரியாக பராமரிக்கப்படாமை, வாகன ஓட்டிகளின் திறமையின்மை போன்ற்றவை இவ்விபத்துகளுக்கு முக்கிய காரணங்களாக அரசு போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

மூலம்[தொகு]