வங்காளதேசம்: விபத்தில் சிக்கி 26 பள்ளிச் சிறுவர்கள் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சூலை 11, 2011

வங்காளதேசத்தின் தென்கிழக்குப் பகுதியில் பள்ளிச் சிறுவர்கள் சென்ற வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் குறைந்தது 26 சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.


காற்பந்துச் சுற்றுப் போட்டியில் கலந்து கொண்டு விட்டுத் திரும்பும் வழியில் அவர்கள் பயணம் செய்த பாரவுந்து கால்வாய் ஒன்றில் சறுக்கி வீழ்ந்து விபத்துக்குள்ளாகியது. சிட்டகொங் மாவட்டத்தில், டாக்காவில் இருந்து 216 கிமீ தூரத்தில் இவ்விபத்து இடம்பெற்றது.


மேலும் பலர் வாகனத்தினுள் சிக்கியுள்ளனர் என்றும், இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. முன்னதாக 40 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் பிபிசி செய்தியாளருக்குத் தெரிவித்தார். இறந்தவர்கள் அனைவரும் 8 முதல் 12 வயதானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மூலம்[தொகு]