உள்ளடக்கத்துக்குச் செல்

வடமாகாண சபை 2013 தேர்தல் அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

புதன், செப்டெம்பர் 4, 2013

வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான தன்­னாட்சி அதி­காரம் ஒன்­றுக்­காக குரல் கொடுக்கும் அதே­வேளை, ஆட்சி அதி­கா­ரத்தை பகிர்ந்­து­கொள்­வ­தற்­கான அர­சியல் பேச்­சு­வார்த்­தை­க­ளையும் முன்­னெ­டுப்போம். தமிழ் மக்­களை ஆளுகின்ற உரிமை கொழும்­பி­லி­ருக்கும் அர­சாங்­கத்­தி­ட­மன்றி அம்­மக்­க­ளி­டமே இருக்­கின்­றது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு இம்மாதம் 21 ஆம் நாள் நடைபெறவிருக்கும் வடமாகாண சபைத் தேர்தலை ஒட்டி நேற்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.


யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள தமி­ழ­ரசுக் கட்­சியின் அலு­வ­ல­கத்தில் நேற்று முற்­பகல் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் தலை­மையில் இந்த தேர்தல் விஞ்­ஞா­பனம் வெளி­யிடும் நிகழ்வு இடம்­பெற்­றது. இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் முன்னாள் நீதியரசர் க. வி. விக்னேஸ்வரன் உட்படப் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்குபற்றினர்.


கூட்­ட­மைப்பின் தேர்தல் அறிக்கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்ள முக்­கிய விட­யங்கள் வரு­மாறு:


30 ஆண்டுப் பகையும் போரும் தமிழ் பேசும் வடக்கு, கிழக்கு பகு­தியை பேர­ழி­வுக்கு உள்­ளாக்­கி­ய­தோடு தமிழ் மக்­க­ளையும் கதி­யற்­ற­வர்­க­ளாக்­கி­யது. இதனால் 10 லட்­சத்­துக்கும் மேற்­பட்ட தமி­ழர்கள் பாது­காப்பு தேடி ஏனைய நாடு­க­ளுக்குத் தப்பிச் செல்ல மேலும் 5 லட்சம் தமி­ழர்கள் நாட்­டுக்­குள்­ளேயே இடம்­பெ­யர்ந்­துள்­ளனர். ஒரு லட்­சத்து 50 ஆயி­ரத்­துக்கு மேற்­பட்ட தமி­ழர்கள் மோதல் நில­விய ஆண்­டு­களில் கொல்­லப்­பட்­டுள்­ளனர். இரா­ணுவத் தாக்­கு­தலின் இறு­திக்­கட்­டத்தில் எழுபதாயிரத்திற்கும் மேற்­பட்ட மக்கள் கொல்­லப்­பட்­டுள்­ளனர் என்று மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. 5 லட்­சத்­துக்கும் மேற்­பட்ட தமிழர்கள் வீடற்­ற­வர்­க­ளாக்­கப்­பட்­டுள்­ளனர். இன்­னமும் மீள் குடி­யேற்றம் நிறை­வ­டை­யாமல் உள்­ளது.


தமிழ் மக்கள் ஒரு தனிச்­சி­றப்பு மிக்க தேசிய இன­மாகும். புவி­யியல் ரீதி­யாக பிணைக்­கப்­பட்­டுள்­ளதும் தமிழ் பேசும் மக்களைப் மக்­களை பெரும்­பான்­மை­யி­ன­ராக கொண்­ட­து­மான வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களே தமிழ் பேசும் மக்­களின் வரலாற்று ரீதி­யான வாழ்­வி­ட­மாகும். தமிழ் மக்கள் சுய­நிர்­ணய உரி­மைக்கு உரித்­து­டை­ய­வர்கள். தமிழ் பேசும் முஸ்லிம்மக்களுக்கும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய முறையில் சமஷ்டிக் கட்­ட­மைப்­பொன்றை அடிப்­ப­டை­யாகக் கொண்டு இணைந்த வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் எனும் ஓர் அல­கி­லான அதி­காரப் பகிர்வு ஏற்­பா­டுகள் நிறு­வப்­பட வேண்டும்.


அதி­காரப் பகிர்­வா­னது காணி, சட்டம் ஒழுங்கு, சுகா­தாரம், கல்வி ஆகி­யன உள்­ளிட்ட சமூக, பொரு­ளா­தார அபி­வி­ருத்தி வளங்கள் மற்றும் நிதி அதி­கா­ரங்கள் ஆகி­ய­வற்றை கொண்­டி­ருக்க வேண்டும்.


வடக்கு, கிழக்­கி­லி­ருந்து இரா­ணு­வத்­தி­னரை அகற்­று­வதன் மூலம் 1983இல் நில­விய யுத்­தத்­துக்கு முந்­திய சூழ்­நிலை மீண்டும் ஏற்­படும் வகையில் இரா­ணுவப் பிர­சன்­ன­மற்ற நிலைமை இருக்க வேண்டும். இடம்­பெ­யர்ந்த தமிழ் மக்கள் மீளக் குடியேற்றப்பட்டு குடி­யேற்­றப்­பட்டு வீடுகள் வழங்­கப்­பட வேண்டும். அவர்­க­ளது வாழ்­வா­தாரம் மீண்டும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.


இறுதிக் கட்ட யுத்­தத்தில் சர்­வ­தேச மனித உரி­மைகள் மற்றும் மனி­தா­பி­மானச் சட்­டங்­களை மீறி­யமை தொடர்பில் சர்­வ­தேச சுயா­தீன விசா­ரணை நடத்­தப்­பட்டு உண்­மையும் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான நீதியும் நிலை­நாட்­டப்­ப­டு­வ­தோடு இழப்­பீ­டுகள் அடங்­க­லான நிவா­ர­ணங்கள் உறு­திப்­ப­டுத்­தப்­படல் வேண்டும். குற்­றச்­சாட்­டுக்­க­ளின்றி தடுத்து வைக்­கப்­பட்­டி­ருப்­ப­வர்கள் விரைவாக விடு­தலை செய்­யப்­ப­டு­வ­தோடு ஏனை­ய­வர்­க­ளுக்கும் பொது மன்­னிப்பு வழங்­கப்­பட வேண்டும்.


காணா­மல்­போன ஆயி­ரக்கணக்­­கா­ன­வர்கள் தொடர்­பாக இறுதி முடிவு எட்­டப்­ப­டு­வ­துடன் அவர்­க­ளது உற­வி­னர்­க­ளுக்கு நட்ட ஈடு வழங்­கப்­பட வேண்டும். நாட்­டை­விட்டு தப்­பி­யோ­டிய தமி­ழர்கள் நாடு­தி­ரும்­பு­வ­தற்­கான சூழல் உரு­வாக்­குதல் அவ­சியம். இளை­ஞர்­க­ளுக்­கான வேலை­வாய்ப்பை உரு­வாக்­குதல் அடங்­க­லாக வடக்கு, கிழக்கின் அபி­வி­ருத்­திக்­கான விரி­வா­ன­தொரு நிகழ்ச்சித் திட்டம் இலங்கை அர­சாங்­கத்­தி­னதும் புலம்­பெயர் தமி­ழர்­க­ளி­னதும் சர்­வ­தேச சமூ­கத்­தி­னதும் முனைப்­பான ஆதரவுடன் மேற்­கொள்­ளப்­படும்.


மத்­திய அர­சாங்­கத்­திலும் அதன் முக­வ­ரான ஆளு­ந­ரி­டமும் அதி­காரம் குவிந்து கிடக்­கி­றது என்­பதால் இலங்கை அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தம் மீறப்­பட்­டுள்­ளது. நம்மில் நாம் தங்­கி­யி­ருப்­ப­தற்கு நம்மை நாமே ஆளு­கின்ற அர­சாங்கம் எமக்கு வேண்­டு­மென்­பது முக்­கி­ய­மாகும். வடக்கு கிழக்­கி­லுள்ள தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான தன்­னாட்சி அர­சாங்­கத்­­துக்­காக குரல்­கொ­டுப்­பதில் சிறந்த பங்­கொன்றை வகிப்­ப­தற்கே எங்­களால் இயன்ற அனைத்­தையும் செய்­கின்ற அதே­வேளை ஆட்சி அதி­கா­ரத்தை பகிர்ந்து கொள்­வ­தற்­கான எமது காத்­தி­ர­மான அர­சியல் பேச்­சு­வார்த்­தை­களை நாம் முன்­னெ­டுப்போம்.


வடக்கு, கிழக்கில் காணிகள் மீதான கட்­டுப்­பாட்டை மாகாண நிர்­வாகம் தக்­க­வைத்­துக்­கொள்­வதில் தமிழ் கூட்­ட­மைப்பு பற்­று­றுதி கொண்­டுள்­ளது. இதேபோல் மாகாண சபை­யினால் பணிப்­புரை விடுக்­கப்­ப­டு­கின்ற ஒரு பொலிஸ் படையே வடக்கு கிழக்­குக்­கான மிகவும் பயன் மிக்க ஒரு பொலிஸ் படை­யாக அமை­யு­மென்று கூட்­ட­மைப்பு நம்­பு­கி­றது.


மூலம்

[தொகு]
  • தன்னாட்சி அதிகாரத்திற்கு குரல் கொடுக்கும் அதேவேளை பேச்சுவார்த்தைக்கும் தயார் வடமாகாண சபை தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ்க் கூட்டமைப்பு தெரிவிப்பு, வீரகேசரி, செப்டெம்பர் 4, 2013
  • TNA manifesto backs UN, கொழும்பு கசெட், செப்டம்பர் 3, 2013
  • Full Text: TNA’s Northern Provincial Council Election Manifesto – 2013, கொழும்பு டெலிகிராப், செப்டெம்பர் 3, 2013