உள்ளடக்கத்துக்குச் செல்

வட மாகாணசபைத் தேர்தல், 2013: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பு மனு தாக்கல்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சூலை 29, 2013

இலங்கையில் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்புமனுக்கள் இன்று திங்கட்கிழமை வட மாகாணத்தின் ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டன. வட மாகாணத்தின் ஐந்து நிருவாக மாவட்டங்களும் இம்முறை தேர்தல் மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. முன்னைய தேர்தல்களில் யாழ்ப்பாணம், வன்னி என இரு தேர்தல் மாவட்டங்களே நடைமுறையில் இருந்தன.

யாழ் மாவட்ட வேட்பாளர்கள்

சி. வி. விக்னேஸ்வரன் (முதலமைச்சர் வேட்பாளர்), சீ. வீ. கே. சிவஞானம், பா. கஜதீபன், ச. சுகிர்தன், எ. ஆனந்தி, எஸ். சயந்தன், எஸ். பரம்சோதி, எஸ். சிவயோகம், ஆர். ஆர்னோல்ட், எம். கே. சிவாஜிலிங்கம், விந்தன் கனகரத்தினம், எஸ். குகதாஸ், த. சித்தார்த்தன், த. தம்பிராசா, க. தர்மலிங்கம், எஸ். சர்வேஸ்வரன், எஸ். ஜங்கரநேசன், ஆர். ஜெயசேகரம், என். வி. சுப்பிரமணியம்

கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன், கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுரேஷ் பிரேமச்சந்திரன், சுமந்திரன், உள்ளிட்டோட் யாழ் மாவட்டத்துக்கான வேட்பு மனுக்களை யாழ் தேர்தல் திணைக்களத்தில் தாக்கல் செய்தனர். நண்பகல் 12.மணிக்கு செய்துள்ளனர். இதன் போது பேசிய சி. வி. விக்னேசுவரன், 13ம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த மக்களுடைய ஒத்துழைப்வே அவசியமாகின்றது. நிச்சயமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கில் அமோக வெற்றி பெறும், அதற்கு மக்களுடைய ஒத்துழைப்பு அவசியம் என்றார். விடுதலைப் புலிகளின் திருகோணமலை அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்தவரான எழிலனின் மனைவி ஆனந்தியும் யாழ் மாவட்டப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர்கள்

வீ. ஆனந்தசங்கரி, த. குருகுலராஜா, ப. அரியரட்ணம், க. திருலோகமூர்த்தி, கே. வேணுபார்த்த குமாரி, சு. பசுபதிப்பிள்ளை, பூ. தர்மகுலசிங்கம்

முல்லைத்தீவு மாவட்ட வேட்பாளர்கள்

அ. ஜெகநாதன், து. ரவிகரன், வீ. கனகசுந்தரசுவாமி, சி. சிவமோகன், வ. கமலேஸ்வரன், க. சிவநேசன், ஆ. புவனேஸ்வரன், திருமதி கு. கமலகுணசிலன்

வவுனியா மாவட்ட வேட்பாளர்கள்

எம். தியாகரசா, க. லிங்கநாதன், ப. சத்தியலிங்கம், எம். பி. நடராஜ், து. நடராஜாசிங்கம், க. சந்திரகுலசிங்கம், இ. இந்திரராசா, மு. முகுந்தரதன், செ. மயூரன்

மன்னார் மாவட்ட வேட்பாளர்கள்

ஞா. குணசீலன், யோ. ஆனந்தன் குரூஸ், சு. சிவகரன், பா. டெனிஸ்ரன், சு. பிறிமோஸ் சித்ராய்வா, கி. விமலசேகரம், இ. சாள்ஸ், ஆயூப் அஸ்மி.

மன்னார் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான முஸ்லிம் கூட்டணி போட்டியிடுகிறது. இக்கூட்டணியின் சார்பில் அசெய்க் அய்யூப் அஸ்மி (நளீமி) என்பவர் போட்டியிடுகிறார்.

வட மாகாண சபை தேர்தலுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவிர மேலும் ஆறு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளும், 12 சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்து கட்டுப்பணமும் செலுத்தியுள்ளன. யாழ். மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் கட்சியும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களுக்கு ஜனசெவன முன்னணியும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளன.


மூலம்

[தொகு]