விக்கிலீக்ஸ் தளத்திற்கு மாற்றாக ஓப்பன்லீக்ஸ் இணையத்தளம் ஆரம்பிக்கப்படவிருக்கிறது

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

செவ்வாய், டிசம்பர் 14, 2010

பிரபல விக்கிலீக்ஸ் செய்திக்கசிவுத் தளத்தின் ஆரம்ப காலத்தில் இரண்டாம்-நிலைப் பணிப்பாளராக இருந்து அதில் இருந்து விலகிய டானியல் டொம்சீட்-பேர்க் என்பவர் விக்கிலீக்சிற்கு இணையாக மாற்று இணையத்தளம் ஒன்றை நிறுவவிருப்பதாக அறிவித்துள்ளார்.


விக்கிலீக்சின் நிறுவனர் யூலியன் அசான்ச்சுடன் முரண்பட்டு விலகிய இவர் அடுத்த சில மாதங்களில் ஓப்பன்லீக்ச் (Openleaks) என்ற பெயரில் புதியதொரு தளத்தை ஆரம்பிக்கவிருப்பதாக பிபிசி செய்திநிறுவனத்துக்கு அவர் தெரிவித்துள்ளார்.


புதிய தளத்தின் தொழில்நுட்பம் எந்த ஒரு நிறுவனத்தின் வலைத்தளத்தினுள்ளும் உள்வாங்கக்கூடியதாக அமைந்திருக்கும். இதன் மூலம் செய்தி கசிபவர் ஒருவர் தான் விரும்பும் எந்த ஒரு செய்தி நிறுவனத்திற்கும் அநாமதேயமாகச் செய்தியை அனுப்பலாம்.


விக்கிலீக்சின் சில தொழில்நுட்பப் பிரச்சினைகள் இத்தளத்தில் மேம்பட்டிருக்கும் என அதன் நிறுவனர்கள் தெரிவிக்கிறார்கள்.


"விக்கிலீக்ஸ் பிழையான வழியில் சென்று கொண்டிருப்பதாக நாம் உணருகிறோம்," என டானியல் டொம்சீட்-பேர்க் பிபிசியிடம் தெரிவித்தார். "ஒரு நிறுவனத்தில் பெருமளவு அதிகாரம் குவிந்துள்ளது; அளவுக்கதிகமான பொறுப்பு; அளவுக்கதிகமான நெரிசல்."


விக்கிலீக்சைப் போல் அல்லாது ஓப்பன்லீக்ஸ் எந்த ஒரு ஆவணத்தையும் வெளியிடாது அல்லது அதன் நம்பகத்தன்மையை ஆராயாது. இதற்கான பொறுப்பு செய்திநிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் போன்றவற்றுக்கு விடப்படும்.


மூலம்[தொகு]

Bookmark-new.svg