உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிலீக்ஸ் நிறுவனருக்கு எதிராக சர்வதேசப் பிடியாணை

Checked
விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, நவம்பர் 21, 2010


விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் நிறுவனர் ஜூலியன் அசான்ச் மீது பன்னாட்டுப் பிடியாணை ஒன்றை சுவீடனில் குற்றவியல் காவல்துறையினர் பிறப்பித்துள்ளனர். பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் தொந்தரவு போன்ற குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளுக்காக அசென்ச் தேடப்படுபவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.


விக்கிகசிவுகள் நிறுவனர் ஜூலியன் அசான்ச்

வெள்ளிக்கிழமை இரவு சர்வதேச காவல் துறை மூலம் இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதாக சுவீடன் காவல்துறையினர் நேற்று அறிவித்தனர்.


"உலகில் உள்ள அனைத்து காவல்துறையினரும் இந்தப் பிடியாணையைக் காணுவார்கள்," என சுவீடனின் தேசிய குற்றவியல் காவல்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.


ஆத்திரேலியாவைச் சேர்ந்த அசான்ச் தற்போது பிரித்தானியாவில் இருப்பதாக நம்பப்படுகிறது. கடந்த ஆகத்து மாதத்தில் இக்குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டிருந்தாலும், பின்னர் அது கைவிடப்பட்டிருந்தது. இக்குற்றச்சாட்டுகளை அசான்ச் மறுத்திருந்தார்.


ஈராக், மற்றும் ஆப்கானித்தான் போர்களில் அமெரிக்க இராணுவத்தின் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய பல்லாயிரக்கணக்கான இரகசிய ஆவணங்களை சென்ற மாதம் விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்டிருந்தது.


அசான்ச் சுவீடனில் பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கினார் என்றும், மேலும் ஒருவர் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகினார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புள்ள செய்திகள்

[தொகு]


மூலம்

[தொகு]