விரைவில் வருகிறது ரூ.2,000 நோட்டு

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

சனி, அக்டோபர் 22, 2016

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்துக்கு வரும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரூ.500, ரூ.1‌000 போன்ற அதிக மதிப்பிலான கரன்சி நோட்டுக்களால் கள்ளநோட்டுகள் மற்றும் கருப்புப் பணம் அதிகரிப்பதால் அவற்றை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. இந்தசூழலில், ரூ.2,000 நோட்டு அச்சடிக்கப்பட்டு வருவது முக்கியத்துவம் பெறுகிறது

ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படிரூ.2,000 நோட்டுக்கள் மைசூரு கரன்சி அச்சகத்தில் அச்சிடப்பட்டு வருவதாகத் தெரிகிறது. இந்த நோட்டுக்களை விரைவில் புழக்கத்துக்கு விட ரிசர்வ் வங்கியை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்பாக 1938 மற்றும் 1954ம் ஆண்டுகளில் 10 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி அச்சடித்தது. அவற்றை 1946 மற்றும் 1978ம் ஆண்டுகளில் ரிசர்வ் வங்கி திரும்பப் பெற்றது. அதன்பிறகு இப்போது அதிகபட்ச மதிப்பாக ரூ.2 ஆயிரம் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி அச்சடித்து வருவதாகத் தெரிகிறது.மூலம்[தொகு]

Bookmark-new.svg