ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் நடத்தும் சிறப்புச் சிறுகதைப் போட்டி

விக்கிசெய்தி இலிருந்து

புதன், மே 28, 2014

நூற்றாண்டை நோக்கிப் பயணிக்கும் ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் மாத இதழ் சிறப்புச் சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்துகிறது. உலகிலுள்ள எந்த சிறந்த சாஸ்திரங்களின் சிந்தனைகளாக இருந்தாலும், அவை எவ்வாறு நடைமுறையில் செயல்வடிவம் பெறுகின்றன என்பதைக் காட்டும் சிறுகதைகளுக்கான போட்டியாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.


கதைகளை அனுப்ப கடைசித் தேதி 2014 சூலை 25 ஆகும். முதல் பரிசாக ரூ.10,000/-, இரண்டாம் பரிசாக ரூ. 8,000/-, மூன்றாம் பரிசாக ரூ. 6,000/-, மற்றும் ரூ. 2,000/- வீதம் 5 ஊக்கப்பரிசுகளும் வழங்கப்படவிருக்கின்றன.


முடிவுகள் செப்டம்பர் ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் வெளியிடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது

மூலம்[தொகு]