ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம்

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

வியாழன், பெப்ரவரி 12, 2015

தருமபுரி, நல்லம்பள்ளியில் உள்ள ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கலையரங்கில் இன்று காலை 10 மணியளவில் தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம் நிகழவுள்ளது. இந்நிகழ்வில் தமிழ்த்துறை மாணவி க.கவிதா வரவேற்புரை நிகழ்த்த உள்ளார், ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் எஸ்.ஹமீதா பானு முன்னிலை வகிக்க உள்ளார், முனைவர்.வெ.சஞ்சீவராயன் தமிழ்த்துறைத் தலைவர் தலைமையுரை வழங்க உள்ளார்.

ஸ்ரீ விஜய் கல்விக் குழுமத்தைச் சார்ந்த டி. என். சி. மணிவண்ணன், செல்வி மணிவண்ணன், ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நிருவாக அலுவலர் பொ.சண்முகவடிவேல், துணை முதல்வர் திரு.க.பாலசுந்தரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.

இந் நிகழ்வில் இதழியல், மக்கள் தொடர்பாடல் துறை பெரியார் பல்கலைக்கழகச் சார்ந்த பேராசிரியர் மா.தமிழ்ப்பரிதி தமிழ் விக்கிப்பீடியாவில் எவ்வாறு தொகுத்தல் பணிகளை மாணவர்கள், ஆசிரியர்கள் மேற்கொள்ளலாம் என்னும் நேரிடைப் பயிற்சியை வழங்க உள்ளார்.

இந்நிகழ்வில் தமிழ்த்துறை மாணவி எஸ்.வினோதினி நன்றியுரை வழங்க உள்ளார்