12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்: சென்னையைச் சேர்ந்த பார்வையற்றவரின் மகள் சாதனை

விக்கிசெய்தி இலிருந்து

சனி, மே 10, 2014

சென்னையின் சைதாப்பேட்டையில் அமைந்துள்ள சென்னை மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவி எம். சவ்ஜன்யா நடந்து முடிந்த 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 1200க்கு 1168 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இவரின் அப்பா ஒரு பார்வையற்றவர் ஆவார். இவரின் அம்மா சில ஆண்டுகளுக்கு முன்னர் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். இந்தக் குடும்ப சூழ்நிலையிலும் இந்த மாணவி படித்து அவரின் அப்பாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

மூலம்[தொகு]