2010 மருத்துவத்துக்கான நோபல் பரிசை பிரித்தானிய அறிவியலாளர் ராபர்ட் எட்வர்ட்சு பெற்றார்

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

செவ்வாய், அக்டோபர் 5, 2010


சோதனைக் குழாய் குழந்தை முறையைக் கண்டுபிடித்த பிரித்தானிய அறிவியலாளர் ராபர்ட் எட்வர்ட்சுக்கு 2010 ஆம் ஆண்டுக்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.


படிமம்:Early human embryos.png
கருச்சேர்க்கையை அடுத்து ஆரம்ப முட்டைக் கருவுயிர் வளர்ச்சி

1950கள், 60கள், 70களில் இவர் மேற்கொண்ட ஆய்வுகளின் பயனாக 1978 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் உலகின் முதலாவது சோதனைக் குழாய்க் குழந்தை லூயிசு பிரவுன் இங்கிலாந்தில் பிறந்தது. அதன் பின்னர் சுமார் 4 மில்லியன் குழந்தைகள் இம்முறை மூலம் பிறந்தன.


இவருடன் இணைந்து பணியாற்றிய பாட்றிக் ஸ்டெப்டோ 1988 இல் இறந்து விட்டார்.


உலகளவில் பத்து சதவீதமான மக்கள் மலட்டுத் தன்மையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டாக்டர் எட்வர்ட்சின் ஆய்வுகள் அந்தத் தன்மையிலிருந்து விடுபடுவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தது என்று நோபல் பரிசுக் குழு தெரிவித்துள்ளது.


பெண்ணின் கருமுட்டைகளை வெளியில் எடுத்து, சோதனைக் குழாயில் வைத்து, ஆணின் வி்ந்தணுவுடன் சேர்த்து அதை கருத்தரிக்கச் செய்து பின்னர் கருப்பைக்குள் செலுத்தும் முறைதான் இந்த சோதனைக் குழாய் குழந்தை தொழில்நுட்பம் (In-vitro fertilisation - IVF).


ராபர்ட்சுக்கு நோபல் பரிசு கிடைத்தது “நல்ல செய்தி” என லூயிசு பிரவுன் தெரிவித்தார். "ஐவிஎஃப் இன் முன்னோடி ஒருவர் இப்போது அங்கீகரிக்கப்பட்டிருப்பது எனக்கும் எனது தாயாருக்கும் மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது,” என்றார் அவர்.


மூலம்

Robert G. Edwards], நோபல்பிறைஸ்.ஓர்க், அக்டோபர் 4, 2010