2012 ஆசியக் கோப்பை துடுப்பாட்டத் தொடர் வங்காளதேசத்தில் ஆரம்பம்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, மார்ச்சு 11, 2012

நான்கு நாடுகள் பங்கேற்கும் 2012 ஆசியக் கோப்பை துடுப்பாட்டத் தொடர் இன்று வங்காளதேசத்தின் மிர்பூர் நகரில் பங்கா மைதானத்தில் ஆரம்பமாகிறது. 26 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆசியக் கோப்பை துடுப்பாட்டத் தொடரில் இப்போது நடைபெறுவது 11-வது ஆண்டு போட்டியாகும்.


இத்தொடரில் இந்தியா, பாக்கித்தான், இலங்கை மற்றும் வங்காளதேசம் ஆகிய நான்கு நாடுகள் பங்கேற்கின்றன. தொடரின் முதல் போட்டியில் பாக்கித்தான், வங்காளதேச அணிகள் இன்று மோதுகின்றன.


ஒவ்வோர் அணியும் பிற அணிகளுடன் ஒருமுறை மோதும். இதில் அதிக வெற்றிகளைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். மார்ச் 22-ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.


இதுவரை நடைபெற்ற ஆசியக் கோப்பை போட்டிகளில் இந்திய, இலங்கை அணிகளே ஆதிக்கம் செலுத்தியுள்ளன. இதற்கு முன் நடைபெற்ற போட்டிகளில் இந்திய அணி 5 முறையும், இலங்கை அணி 4 முறையும், பாக்கித்தான் அணி ஒருமுறையும் கோப்பையை வென்றுள்ளன. 2010-ம் ஆண்டு நடைபெற்ற ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி இலங்கையை வென்று கோப்பையைக் கைப்பற்றியது.


மேற்படி தொடரில் அனைத்துப் போட்டிகளும் பகல்-இரவு ஆட்டங்களாக நடைபெறும்.


மூலம்[தொகு]