உள்ளடக்கத்துக்குச் செல்

2012 உலக சதுரங்கப் போட்டியில் ‌வி‌சுவநாத‌ன் ஆனந்த் வெற்றி

விக்கிசெய்தி இலிருந்து

புதன், மே 30, 2012

இந்திய கிராண்ட் மாஸ்டர் வி‌சுவநாத‌ன் ஆனந்த், இசுரேலை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் போரிஸ் ஜெல்ஃபான்டை தோற்கடித்ததன் மூலம் மாஸ்கோவில் நடைபெற்று வந்த உலக சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்றார். இதன் மூலம் விசுவநாதன் ஆனந்த் ஐந்தாவது முறையாக இப்பட்டத்தை கைப்பற்றுகிறார்.


இந்த உலக சதுரங்கப் போட்டியில் இதுவரை நடந்து 12 சுற்று போட்டிகளில் இருவரும் தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்றனர், மீதி போட்டிகள் சமநிலையில் முடிவடைந்தன. எனவே இருவரும் 6-6 புள்ளிகளில் சமநிலையில் இருந்தனர். இந்நிலையில் இன்று நடந்த வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் போட்டியில் 2.5-1.5 என்ற புள்ளி கணக்கில் ஆனந்த் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றினார்.


இன்று நடைபெற்ற வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் போட்டியில் நான்கு போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொருவருக்கும் தலா 25 நிமிடங்கள் தரப்பட்டன. இதில் முதல் போட்டி சமனில் முடிவடைந்தது, இரண்டாவது போட்டியில் ஆனந்த் வெற்றி பெற்றார், மீண்டும் மூன்றாவது போட்டி சமனில் முடிவடைந்தது, நான்காவது போட்டியில் 56வது நகர்த்தலுக்குப் பின் போட்டி சமனில் முடிவடைந்தது. எனவே ஆனந்த் வெற்றி பெற்றார்.இதன் மூலம் ஆனந்த் $1.5மில்லியன் பரிசுத் தொகையையும், போரிஸ் ஜெல்ஃபான்ட் $1மில்லியன் பரிசுத் தொகையையும் பெறுகின்றனர்.


தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]