2012 ஒலிம்பிக்சு: அமெரிக்காவின் மைக்கேல் பெல்ப்சு 18வது தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்தார்
- 17 பெப்ரவரி 2025: டோக்கியோ 2020 ம் ஆண்டுக்கான ஒலிம்பிக்கை நடத்த தகுதி பெற்றது
- 17 பெப்ரவரி 2025: 2012 ஒலிம்பிக்சு மாரத்தான்: உகாண்டாவின் ஸ்டீவன் கிப்ரோட்டிச் தங்கப்பதக்கம் பெற்றார்
- 17 பெப்ரவரி 2025: 2012 ஒலிம்பிக்சு: அமெரிக்காவின் மைக்கேல் பெல்ப்சு 18வது தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்தார்
- 17 பெப்ரவரி 2025: 2012 ஒலிம்பிக்சு: எத்தியோப்பியாவின் திருனேசு டிபாபா 10,000 மீ ஓட்டப்பந்தயத்தில் தங்கம் பெற்றார்
- 17 பெப்ரவரி 2025: 2012 ஒலிம்பிக்சு: எட்டு வீராங்கனைகளை உலக இறகுப்பந்தாட்டக் கழகம் தகுதியிழந்ததாக அறிவித்தது
ஞாயிறு, ஆகத்து 5, 2012
அமெரிக்காவின் மைக்கேல் பெல்ப்சு ஒலிம்பிக் போட்டிகளில் தனது 18வதும் கடைசியுமான தங்கப் பதக்கத்தை நேற்று லண்டனில் நடந்த 4x100 மீட்டர் மெட்லி நீச்சல் போட்டியில் பெற்றார். விரைவில் இளைப்பாறவிருக்கும் பெல்ப்சிற்கு இதுவே அவரது கடைசி ஒலிம்பிக் போட்டியாகும்.

ஒலிம்பிக் போட்டிகளில் 18 தங்கங்கள், 2 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 22 பதக்கங்களைப் பெற்று உருசியாவின் லரீசா லெத்தினினாவின் 18 பதக்கங்கள் என்ற சாதனையையும் முறியடித்துள்ளார்.
நேற்றைய போட்டியில் சப்பான் இரண்டாவதாகவும், ஆத்திரேலியா மூன்றாவதாகவும் வந்தது.
பெல்ப்சு முதன் முதலில் 2000 ஆம் ஆண்டில் சிட்னியில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தனது 15வது அகவையில் பங்குபற்றி ஆறு தங்கங்களைப் பெற்றார். 2004 ஏத்தன்சு போட்டியில் 2 வெண்கலப் பதக்கங்களைப் பெற்றார். அதன் பின்னர் 2008 பெஜிங்கில் நடந்த போட்டிகளில் 8 தங்கங்களைப் பெற்றார். தற்போது நடைபெறும் லண்டன் போட்டிகளில் இவர் 4 தங்கப்பதக்கங்களையும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் பெற்றார். 15 ஆண்டுகளாக பொப் போமன் இவரின் பயிற்சியாளராகப் பணியாற்றினார்.
மூலம்
[தொகு]- Michael Phelps wins 18th and final Olympic gold in London, பிபிசி, ஆகத்து 4, 2012
- Michael Phelps wins 18th gold medal in final race, பொஸ்டன் குளோப், ஆகத்து 4, 2012