2012 ஒலிம்பிக்சு மாரத்தான்: உகாண்டாவின் ஸ்டீவன் கிப்ரோட்டிச் தங்கப்பதக்கம் பெற்றார்

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

திங்கள், ஆகத்து 13, 2012

2012 லண்டன் மாரத்தான் ஒலிம்பிக் போட்டிகளின் ஆண்கள் பிரிவில் உகாண்டாவைச் சேர்ந்த ஸ்டீவன் கிப்ரோட்டிச் முதலாவதாக வந்து தங்கப்பதக்கத்தைப் பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை கென்ய வீரர்கள் அபெல் கிரூயி, வில்சன் கிப்சாங் ஆகியோர் பெற்றனர்.


கிப்ரோட்டிச் எடுத்துக்கொண்ட நேரம் 2 மணி, 8 நிமி. 11 செக். ஆகும். இவர் இரண்டாவதாக வந்த கென்ய வீரர் கிரூயி ஐ 26 செக்கன்களாலும், மற்றுமொரு கென்ய வீரர் கிப்சாங்கை மேலும் 70 செக்கன்களாலும் வென்றார்.


லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் உகாண்டாவுக்குக் கிடைத்த ஒரேயொரு பதக்கம் இதுவாகும். உகாண்டாவின் கடைசி ஒலிம்பிக் வீரர் ஜோன் அக்கீ-புவா ஆவார். இவர் 1972 ஆம் ஆண்டின் மூனிச் நகரில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் பெற்றார்.


மூலம்[தொகு]