2015ஆம் ஆண்டுக்கான இந்திய தொடருந்து வரவு செலவு கணக்கு அறிமுகம்

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, பெப்பிரவரி 27, 2015

2015-16ஆம் ஆண்டுக்கான இந்திய தொடருந்து வரவு செலவு கணக்கை அத்துறையின் அமைச்சர் சுரேசு பிரபு மக்களவையில் அறிமுகப்படுத்தினார். இது அவர் அறிமுகப்படுத்தும் முதல் வரவு-செலவு திட்டமாகும்.


பயணிகள் போக்குவரத்து கட்டணம் உயர்த்தப்படவில்லை, ஆனால் சரக்கு போக்குவரத்து கட்டணம் 10% அளவு உயர்த்தப்பட்டுள்ளது. 400 தொடருந்து நிலையங்களில் வெய்பை எனப்படும் கம்பியில்லா இணைய இணைப்பு வழங்கப்படும் என்றும் தொடருந்துகளில் நவீன கழிப்பறை நிறுவப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. தற்போது 17,388 உயிரிகழிவறைகள் நிறுவப்பட்டுள்ளன என்றும் இவ்வாண்டில் 17,000 நிறுவப்பட்டுவிடும் என்றும் கூறினார்.


ஐந்து ஆண்டுகளில் (2015-19) ரூ 12,500 கோடிக்கு அளவில் பயணிகளுக்கு வசதிகள் செய்து தரப்படும் என்றும் டிக்கெட்டுகளை பயணநாளுக்கு 60 நாளுக்கு முன்பதிவு செய்படுவதற்கு பதில் இப்போது 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை இப்போது 5 நிமிடத்தில் பெறலாம் என்றும் அதற்காக தொடருந்து நிலையங்களில் தானியங்கி எந்திரம் வைக்கப்படும் என்று கூறினார்


விரைவில் இருக்கை காலியாக உள்ளதா என்று அறியும் வசதி செய்யப்படும் என்றார்.


தொலைபேசி குறுஞ்செய்திகளின் வழியாக தொடருந்துகள் புறப்படும் மற்றும் வருகை நேரங்களை அறிவி்க்கப்படும் என்றார். சில சதாப்தி தொடருந்துகளில் பொழுதுபோக்கு வசதி செய்யப்படும் என்றும் அதன் வரவேற்பை பொருத்து அனைத்து சதாப்திகளிலும் அவ்வசதி செய்து தரப்படும் என்றார்.


அலைபேசிகளை மின்னேற்றம் செய்ய இன்னும் அதிக இடங்களில் மின்னேற்றவசதி செய்துதரப்படும் என்றார்.


பெண்களின் பாதுகாப்பிற்காக சில தொடருந்துகளில் நிழற்படக்கருவி பொருத்தப்படும் என்றார். பாதுகாப்பு தொடர்பான புகார்களை தெரிவிக்க கட்டணம் இல்லா 182 என்ற எண் பயன்படுத்தப்படும் என்றார்.


ஒன்பது வழித்தடங்களில் தற்போதைய தொடருந்தின் வேகம் மணிக்கு 110-130 கிமீ என்பதை மணிக்கு 160-200 கிமீ என்று அதிகப்படுத்தப்படும் என்றும் இதனால் மும்பை-தில்லி, தில்லி-கொல்கத்தா பயணம் ஓரிவிலேயே முடிந்து விடும்.


சில தொடருந்தில் 24 பெட்டிகளுக்கு பதிலாக மேலும் 2 பெட்டிகள் இணைக்கப்பட்டு அது 26 பெட்டிகள் உடையதாக ஆக்கப்படும் என்றும் அதனால் அதிக பயணிகள் பயணம் செய்ய முடியும் என்றும் கூறினார்.


மூலம்[தொகு]