5,500 ஆண்டுகள் பழமையான காலணி ஆர்மீனியாவில் கண்டுபிடிக்கப்பட்டது

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

சனி, சூன் 12, 2010

5,500 ஆண்டுகள் பழமையான தோலினால் செய்யப்பட்ட, நன்கு பதப்படுத்தப்பட்ட காலணி ஒன்று ஆர்மீனியக் குகை ஒன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


ஆர்மேனியாவின் அரேனி கிராமம்

அயர்லாந்தின் கோர்க் பல்கலைக்கழகக் கல்லூரியைச் சேர்ந்த பன்னாட்டுத் தொல்லியலாளர்களைக் கொண்ட குழு ஒன்றே இதனைக் கண்டுபிடித்துள்ளது. ஆர்மீனியாவில் அரேனி என்ற இடத்தில் உள்ள இந்தக் குகையின் நிலையான குளிர் மற்றும் உலர் சூழ்நிலையே இந்தக் காலணியை இவ்வளவு காலம் பாதுகாத்து வைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.


"ஒரு முழுத்துண்டு தோலினால் இழையப்பட்ட இக்காலணி ஒரு துறைசார் வல்லுநர் ஒருவராலேயே செட்டப்பட்டிருக்க வேண்டும்," என முனைவர் ரொன் பின்காசி தெரிவித்தார்.


இக்காலணியின் இரு மாதிரிகள் ஐக்கிய இராச்சியத்திலும், கலிபோர்னியாவிலும் உள்ள இரண்டு ரேடியோகார்பன் ஆய்வுகூடங்களில் வெவ்வேறாகப் பரிசோதிக்கப்பட்டதில், இரண்டும் ஒரே முடிவுகளையே கொண்டிருந்தன.


முன்னராக ஐக்கிய அமெரிக்காவின் மிசூரி மாநிலத்திலும், இசுரேலின் யூடியன் பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட காலணிகளே இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் பழமையான காலணியாக இருந்து வந்துள்ளது.

மூலம்[தொகு]