500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என இந்திய பிரதமர் அறிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, நவம்பர் 8, 2024

500, 1000 ரூபாய் நோட்டுகள் நாளை முதல் செல்லாது என இந்திய பிரதமர் தொலைக்காட்சியில் அறிவித்தார். புதிதாக 500,2000 நோட்டுகள் நவம்பர் 10 முதல் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் என்றும் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் குறைந்த அளவிலேயே பகிரப்படும் என தெரிவித்தார்.


கருப்பு பணத்தை பதுக்கியுள்ளோருக்கான நடவடிக்கையாக இது கருதப்படுகிறது. நவம்பர் 11 வரை இப்போதுள்ள 500, 1000 நோட்டுகள் மருத்துவமனைகளிலும் தொடருந்து நிலையங்களிலும் வானூர்தி நிலையங்களிலும் பாறைநெய் சில்லறை விற்பனை நிலையங்களான பங்குகளிலும் செல்லும்.


அடுத்த 50 நாட்களுக்குள் 500, 1000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றலாம். வங்கிளும் ஏடிம்களும் புதன்கிழமை செயல்படாது. நவம்பர் 11 வரை ஏடிம்களில் 2,000 ரூபாயுக்கு மேல் எடுக்கமுடியாது.


சில நாட்களுக்கு 10,000 ரூபாய்க்கு மேல் பணத்தை மாற்றமுடியாது என அரசு தெரிவித்தது.


மூலம்[தொகு]