75 தமிழ் அகதிகளுடன் சென்ற படகை மலேசியா வழிமறித்தது

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

சனி, ஏப்ரல் 24, 2010


ஆஸ்திரேலியா நோக்கிச் சென்ற 75 இலங்கைத் தமிழர்கள் சென்ற படகு மலேசியக் கடல் பகுதியில் பழுதடைந்ததை அடுத்து அப்படகை மலேசியக் கடலோரக் காவல்படையினர் சுற்றி வளைத்துள்ளனர்.


மலேசிய கடலோரக் காவல்படையினர் அவர்களை தரையிறங்குமாறு வற்புறுத்தி வரும் நிலையில் படகில் உள்ளவர்கள் இறங்க மறுத்து வருகின்றனர். இவர்களில் பெண்கள், குழந்தைகளும் அடங்குவர்.


மலேசியாவில் கரை இறங்கினால் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படலாம் என்பதால் தமிழர்கள் தரையிறங்க மறுத்து வருகின்றனர்.


தரையிறங்க வேண்டுமானால், தங்களை மலேசியாவே அகதிகளாக ஏற்று கொள்ள வேண்டும் அல்லது தங்களை ஏற்கக் கூடிய ஏதோ ஒரு நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அகதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தோனேசியாவில் மெராக் துறைமுக அகதிகளின் நிலையே இவர்களுக்கும் நேரலாம் எனப் பரவலாக அஞ்சப்படுகிறது.

அதே வேளையில், மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ல படகை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் மலேசிய, மற்றும் இந்திய அரசுகளைக் கேட்டு இருக்கிறார்.

மூலம்[தொகு]