உருசிய உளவாளிகள் பலர் ஜோர்ஜியாவில் கைது செய்யப்பட்டனர்
வெள்ளி, நவம்பர் 5, 2010
- 7 சூலை 2014: ஜோர்ஜியாவின் முன்னாள் தலைவர் எதுவார்த் செவர்த்நாத்சே காலமானார்
- 5 சனவரி 2013: ஜோர்ஜியாவில் அரசுத்தலவர் சக்காஷ்விலியைப் பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டம்
- 2 அக்டோபர் 2012: ஜோர்ஜிய நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சி தோல்வி
- 9 ஏப்பிரல் 2012: தெற்கு ஒசேத்தியா அரசுத்தலைவர் தேர்தலில் உருசிய சார்பு லியோனித் திபிலொவ் வெற்றி
- 5 நவம்பர் 2010: உருசிய உளவாளிகள் பலர் ஜோர்ஜியாவில் கைது செய்யப்பட்டனர்
உருசியாவுக்கு உளவு பார்த்தாகக் குற்றம் சாட்டப்பட்டு நாங்கு உருசியர்களையும் ஒன்பது ஜோர்ஜியர்களையும் ஜோர்ஜியக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தனது இராணுவ இரகசியங்கள் பலவற்றை ஜோர்ஜிய இராணுவத்தில் பணியாற்றிய அதிகாரிகள் பலர் உருசியாவுக்குக் கொடுத்துள்ளதாக ஜோர்ஜிய உள்துறை அமைச்சு அலுவலகம் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
2008 ஆம் ஆண்டில் உருசியாவுக்கும் ஜோர்ஜியாவுக்கும் இடையில் இடம்பெற்ற போர் இடம்பெற்ற காலத்தில் இவர்கள் உளவு பார்த்து தகவல்களை உருசிய உளவாளிகளுக்குக் கொடுத்ததாக உள்துறை அமைச்சுப் பேச்சாளர் உத்தியாஷ்விலி தெரிவித்தார். ஜோர்ஜியாவில் இருந்து பிரிந்து போன தெற்கு ஒசேத்தியாவில் ஜோர்ஜியப் படைகள் நடத்திய தாக்குதலை முறியடிக்க உருசியப் படைகள் அங்கு ஊடுருவி ஜோர்ஜியப் படைகளுடன் மோதின.
இக்கைதுகள் அக்டோபரில் இடம்பெற்றிருந்தாலும், அது குறித்து இன்று வெள்ளிக்கிழமையே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இக்கைதுகளை வன்மையாகக் கண்டித்துள்ள உருசிய வெளியுறவுத்துறை அமைச்சு ஜோர்ஜியாவின் இந்நடவடிக்கையை "ஒரு அரசியல் ஏய்ப்பு" எனத் தெரிவித்துள்ளது.
மூலம்
[தொகு]- Georgia busts 'Russian spy ring', அல்ஜசீரா, நவம்பர் 5, 2010
- Georgia 'breaks Russian spy ring', நவம்பர் 5, 2010