எயிட்டியில் 7.3 ரிக்டர் நிலநடுக்கம் பலர் உயிரிழப்பு
புதன், சனவரி 13, 2010
- 23 திசம்பர் 2011: எயிட்டியில் ஐநா வானூர்தி வீழ்ந்து நொறுங்கியதில் 11 பேர் உயிரிழந்தனர்
- 16 திசம்பர் 2011: எயிட்டியில் இடிபாடுகளுக்கிடையில் சிக்கிய இளம் பெண் 15 நாட்களின் பின் மீட்கப்பட்டார்
- 16 திசம்பர் 2011: எயிட்டியில் 7.3 ரிக்டர் நிலநடுக்கம் பலர் உயிரிழப்பு
- 17 சனவரி 2011: எயிட்டியின் முன்னாள் அரசுத்தலைவர் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்பினார்
- 24 அக்டோபர் 2010: எயிட்டியில் வாந்திபேதி நோய் பரவல், பலர் உயிரிழப்பு
நடு அமெரிக்காவில் கரிபியன் பகுதியில் அமைந்துள்ள எயிட்டியின் தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸ் அருகே 10 மைல் தொலைவில் 7.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சேத விபரங்கள் இன்னும் முழுமையாக தெரியவில்லை.
முதலில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கத்தை தொடர்ந்து 5.9 மற்றும் 5 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அதிபர் மாளிகை, மருத்துவமனைகள், அரச அலுவலகங்கள் உட்பட பல கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. நாட்டின் தொலை தொடர்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் செவ்வாய் உள்ளூர் நேரம் 1653 (2153 கிரீன்விச்) நடந்தது என அமெரிக்க புவியியல் துறையினர் குறிப்பிட்டுள்ளனர். சுனாமி எச்சரிக்கையும் எயிட்டியின் கரையோரப் பகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் கடற்கரையோரமாக அல்லாமல் நிலத்துக்கு அடியில் நிகழ்ந்துள்ளதால் மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
எயிட்டியில் பணியாற்றிவரும் ஐ.நா இலங்கைத் துருப்பினர் யாவரும் நலமாக இருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயகார தெரிவித்துள்ளார். 950 இலங்கைத் துருப்பினர் அமைதிப் படையாகப் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மூலம்
- "Haiti earthquake feared to have killed many". பிபிசி, சனவரி 13, 2010
- Big Haiti quake topples buildings, many casualties, ராய்ட்டர்ஸ், சனவரி 12, 2010
- Thousands feared dead as huge earthquake destroys Haiti presidential palace, டைம்ஸ், சனவரி 13, 2010
- Lankan troops in Haiti safe டெய்லி மிரர் சனவரி 13, 2010