உள்ளடக்கத்துக்குச் செல்

கியூபாவில் விமானம் வீழ்ந்ததில் 68 பேர் உயிரிழந்தனர்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, நவம்பர் 5, 2010

கியூபாவின் மத்திய பகுதியில் பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த அனைத்து 68 பேரும் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்களில் 28 பேர் வெளிநாட்டினர் ஆவர். விபத்துக்கான காரணம் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.


ஏரோகரியன் சேவையில் இட்டுபட்டுள்ல ஏடிஆர் 72 விமானம்

அரசினால் நிர்வகிக்கப்படும் ஏரோகரிபியன் விமானம் கண்டியாகோ டி கியூபா என்ற கிழக்கு ந்கரில் இருந்து தலைநகர் அவானா நோக்கிச் சென்று கொண்டிருந்த போதே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. உயிர்தப்பியவர்கள் எவரும் காணப்படவில்லையென விபத்து நடந்த இடத்துக்குச் சென்ற கியூபாவின் வான்வெளிப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.


பிரெஞ்சுத் தயாரிப்பான ஏடிஆர் டர்போ விமானம் வியாழன் மாலை குவாசிமால் என்ற நகரின் மலைப்பகுதியில் வீழ்ந்தது. இவ்விமானத்தில் பயணம் செய்த அனைவரும் சுற்றுலாப் பயணிகள் எனக் கூறப்படுகிறது.


விமானத்துக்கான தொடர்புகள் துண்டிக்கப்படுவதற்கு முன்னர் விமானி அவசர எச்சரிக்கை விடுத்திருந்தார்.


1989 செப்டம்பர் 3 ஆம் நாள் சோவியத் தயாரிப்பான இலியூசின்-62 விமானம் அவானாவுக்கருகில் வீழ்ந்து நொறுங்கியதில் பயணிகள் 126 பேரும், தரையில் இருந்த 40 பேரும் கொல்லப்பட்டனர். அவ்விபத்துக்குப் பின்னர் நேற்று நடந்த விபத்தே கியூபாவில் நிகழ்ந்தவற்றில் பெரும் விமான விபத்தாகும்.


மூலம்

[தொகு]