உள்ளடக்கத்துக்குச் செல்

பிரித்தானிய அரச வம்சத்திற்குப் புதிய வாரிசு, கேத்தரீனுக்கு ஆண் குழந்தை பிறந்தது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சூலை 23, 2013

பிரித்தானிய இளவரசர் வில்லியமின் மனைவி, கேட் மிடில்டனுக்கு இன்று ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பிரித்தானிய அரியாசனத்திற்கு தகுதி வாய்ந்தவர்களில் இப்போது பிறந்துள்ளது மூன்றாவது வாய்ப்புள்ள வாரிசு ஆகும்.


கேம்பிரிட்ச் சீமாட்டி கேட்

கேட் மிடில்டன், பிரசவத்திற்காக லண்டனில் உள்ள புனித மேரீசு மருத்துவமனையில், கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை முதலே அவருக்கு பிரசவ வலி இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை உள்ளூர் நேரம் 4.24 மணிக்கு 3.8 கிலோ எடையுள்ள ஆண் குழந்தை பிறந்ததாக கென்சிங்டன் மாளிகை அறிவித்துள்ளது.


கேம்ப்ரிட்ஜ் சீமாட்டி கேட்டுக்கு ஆண் குழந்தை பிறந்ததை அடுத்து உலகெங்கிலிருந்தும் வாழ்த்துச் செய்திகள் குவிந்த வண்ணம் உள்ளன. பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்களும், மருத்துவமனை வளாகத்தில் முகாமிட்டு உள்ளனர். பிரித்தானிய மகாராணி எலிசபெத்தும் அவரது கணவர் எடின்பரோ கோமகனும் தாங்கள் மிகுந்த உவகை கொள்வதாகக் கூறியுள்ளனர்.


குழந்தைக்கு பெயர் இன்னும் வைக்கப்படவில்லை. ஆனாலும், ஜார்ஜ் என்ற பெயரைப் பலரும் விரும்புகின்றனர். அதன் பின்னர் ஜேம்சு, அலெக்சாண்டர் போன்ற பெயர்களும் மக்களின் விருப்பபெயர்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.


மூலம்

[தொகு]