உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசியாவின் தமிழ் நேசன் பத்திரிகைக்கு அச்சுறுத்தல்

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், நவம்பர் 16, 2009



மலேசியாவில் இந்திய பூர்வீகம் கொண்டவர்கள் ஐந்து பேர் கடந்த வாரம் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட நிகழ்வு குறித்து அந்நாட்டின் தமிழ் செய்தித்தாளான "தமிழ் நேசன்" பத்திரிகை இனியும் செய்தி வெளியிட்டால் அப்பத்திரிகை பிரசுர உரிமத்தை இழக்க நேரிடும் என்ற அச்சுறுத்தல்கள் வந்துள்ளதாக அப்பத்திரிகையின் தலைமை நிறைவேற்று அதிகாரி கூறியுள்ளார்.


தமிழ் நேசன் வெளியிடும் இந்நிகழ்வு பற்றிய செய்திகளால் நாட்டில் இனரீதியான பதற்றம் அதிகரிப்பதாக தன்னிடம் கூறப்பட்டிருந்ததாக பத்திரிகையின் தலைமை அதிகாரி வேல் பாரி தெரிவித்துள்ளார்.


ஆனால் மலேசிய ஊடகங்கள் பலவற்றைப் போலத்தான் தாங்கள் அச்சம்பவம் பற்றி செய்தி வழங்குவதாகக் கூறும் வேல்பாரி தமது செய்தியில் தவறில்லை என்றும் கூறினார்.


காவல்துறையினரின் ப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள் குற்ற சந்தேக நபர்கள் என்றும் அவர்கள் பொலிசார் மீது முதல் சுட்டதால்தான் அவர்களைத் திருப்பிச் சுடவேண்டி வந்தது என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

மூலம்

[தொகு]