இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

புதன், பெப்பிரவரி 10, 2010

இலங்கையில் தற்போதைய நாடாளுமன்றத்தின் ஆட்சிக் காலம் முடிய இரண்டு மாதங்கள் உள்ள நிலையில், அண்மையில் இரண்டாவது தடவையாக அரசுத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்றத்தை நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் இருந்து கலைப்பதாக அறிவித்துள்ளார்.


இந்த அறிவிப்பு இரவில் இருந்து அமலுக்கு வரும் என்று அரசு சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்துள்ளார்.


தேர்தல் எப்போது நடக்கும் என்பது குறித்து தேர்தல் ஆணையர் கூறுவார் என்றும் அவர் கூறினார். ஆனாலும் ஏப்ரல் 8 ஆம் நாள் தேர்தல் இடம்பெறலாம் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.


முன்னாள் இராணுவத் தளபதியும் அரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டவருமான ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு 24 மணி நேரத்திற்குள் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


இக்கைதுக்கு எதிராக இன்று புதன்கிழமையில் இருந்து எதிர்க்கட்சிகள் கூட்டாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நாடெங்கும் நடத்துவதற்கு தீர்மானித்திருக்கின்றன.

மூலம்