தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்குரியவராகி வரும் பிரபாகரனின் தாயார்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, பெப்பிரவரி 13, 2011

நோயுற்று படுக்கையிலிருக்கும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் தற்போது சிங்கள சுற்றுலாப் பயணிகளின் காட்சிப் பொருளாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் வல்வெட்டித் துறை அரச வைத்தியசாலை யில் சிகிச்சை பெற்று வரும் பிரபாகரனின் தாயார் (81 வயது) பார்வதி அம்மாளைப் பார்வையிடவும், அவருடன் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளவும் முண்டியடித்து நிற்கின்றனர்.


81 வயதான அவர் நோயுற்ற நிலையில் வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றார். அவரது உடல் நிலை நாளுக்கு நாள் தளர்வடைந்து வருகதாக வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணத்திற்கு வரும் தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் அவரை மருத்துவமனையில் வந்து பார்வையிட்டு, புகைப்படங்களும் எடுத்துச் செல்கின்றனர். இது ஒரு அரச மருத்துவமனை, இங்கு கட்டுப்பாடுகள் கிடையாது. எவரும் இங்கு புகைப் படங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளதாம். முன்னர் பிரபாகரனின் வல்வெட்டித்துறை வீடு உல்லாசப் பயணிகளை அதிகளவு கவரும் இடமாக இருந்தது. ஆனால் இப்போது அவரின் தாயாரான பார்வதி அம்மாளை பார்ப்பதற்கே அதிகமானோர் செல்கின்றனர்.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]