இலங்கையின் புதிய சட்டமா அதிபராக பாலித்த பெர்னாண்டோ நியமனம்

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சூலை 17, 2012

இலங்கை அதன் புதிய சட்டமா அதிபராக பாலித்த பெர்னாண்டோவை நியமித்துள்ளது. இலங்கை அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவால் இந்நியமனம் வழங்கப்பட்டது.


பாலித்த பெர்னாண்டோவை 27வது சட்ட மா அதிபராக நியமிக்க இலங்கையின் நாடாளுமன்றப் பேரவை அண்மையில் அனுமதி அளித்திருந்தது.


சட்ட மா அதிபராக பதவி வகித்த ஈவா வனசுந்தர அண்மையில் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இவரது நியமனம் நிகழ்ந்துள்ளது.


மூலம்[தொகு]