உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியா கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையைச் சோதிக்கிறது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

புதன், ஏப்பிரல் 18, 2012

இந்தியா கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு குண்டுகளை தாங்கிச் செல்லவல்ல அக்னி-5 ஏவுகணையை நாளை சோதனை செய்கிறது.


அக்னி ஏவுகணை தாக்குதல் தூரம்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 5000 கிலோமீட்டருக்கு மேல் செல்லக்கூடிய அக்னி-5 ஏவுகணையை ஒரிசா மாநிலத்தின் வீலர் தீவிலிருந்து இந்தியா இன்று சோதனை செய்யவிருக்கிறது. மூன்று அடுக்குகளைக் கொண்ட திட எரிபொருளில் இயங்கவல்ல அக்னி-5 17.5மீ உயரமும், 50 டன் எடையும் கொண்டது. இது 2.5 பில்லியன் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது.


இதுவரை சீனா, உருசியா, பிரான்சு, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகியவை மட்டுமே இவ்வாறான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வைத்துள்ளன.


இன்று இடம்பெற வேண்டிய சோதனை மோசமான வானிலை காரணமாக கடைசி நேரத்தில் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


மூலம்

[தொகு]