இந்தியா கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையைச் சோதிக்கிறது
Appearance
இந்தியாவில் இருந்து ஏனைய செய்திகள்
- 11 பெப்பிரவரி 2024: அயோத்தி இராமர் கோயில் திறப்பு விழா
- 12 செப்டெம்பர் 2020: தமிழகத்தில் செப்.30 வரை தளர்வுகளுடன் இ-பாஸ் இல்லாத பொது முடக்கம் நீட்டிப்பு
- 25 மே 2018: தூத்துக்குடி செய்தி இன்று
- 25 பெப்பிரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்
- 16 பெப்பிரவரி 2018: 11000 கோடி பஞ்சாப் நேசனல் வங்கி ஊழல் நீரவ் மோதி தலைமறைவு
இந்தியாவின் அமைவிடம்
புதன், ஏப்பிரல் 18, 2012
இந்தியா கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு குண்டுகளை தாங்கிச் செல்லவல்ல அக்னி-5 ஏவுகணையை நாளை சோதனை செய்கிறது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 5000 கிலோமீட்டருக்கு மேல் செல்லக்கூடிய அக்னி-5 ஏவுகணையை ஒரிசா மாநிலத்தின் வீலர் தீவிலிருந்து இந்தியா இன்று சோதனை செய்யவிருக்கிறது. மூன்று அடுக்குகளைக் கொண்ட திட எரிபொருளில் இயங்கவல்ல அக்னி-5 17.5மீ உயரமும், 50 டன் எடையும் கொண்டது. இது 2.5 பில்லியன் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதுவரை சீனா, உருசியா, பிரான்சு, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகியவை மட்டுமே இவ்வாறான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வைத்துள்ளன.
இன்று இடம்பெற வேண்டிய சோதனை மோசமான வானிலை காரணமாக கடைசி நேரத்தில் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மூலம்
[தொகு]- India to test fire long-range missile பிபிசி, ஏப்ரல் 18, 2012
- Crucial Agni-V launch today, த இந்து, ஏப்ரல் 18, 2012
- அக்னி 5 ஏவுகணை இன்று சோதனை, தினகரன், ஏப்ரல் 18, 2012
- Test-firing of long range ballistic missile Agni-V delayed due to bad weather, தி இந்தியன் எக்ஸ்பிரஸ், ஏப்ரல் 18, 2012