உள்ளடக்கத்துக்குச் செல்

அமெரிக்காவில் 640 மில்லியன் டாலர் குலுக்கலில் வெல்லப்பட்டது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், ஏப்பிரல் 2, 2012

உலகில் முதற்தடவையாக 640 மில்லியன் அமெரிக்க டொலர் அமெரிக்கக் குலுக்கலில் (லொத்தர்) வெல்லப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குலுக்கல் மூலம் வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவ்வெற்றியாளர்களைத் தேடும் பணிகள் அமெரிக்காவில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


42 மாநிலங்கள் பங்கு பற்றிய இந்தக் குலுக்கலில் இலினொய், கன்சாசு மற்றும் மேரிலாந்து மாநிலங்களைச் சேர்ந்த மூன்று வெற்றியாளர்கள் இந்த அதிட்டச் சீட்டினை பெற்றிருக்கின்றனர். மூவருக்கும் பரிசுத் தொகை பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. உலகளவில் முதல் தடவையாக அதிக பணத்தொகை இதன் மூலம் வெல்லப்பட்டுள்ளது. புளோரிடா, அலபாமா, மிசிசிப்பி, அலாஸ்கா, அவாய், வயோமிங்கு, ஊட்டா, மற்றும் நெவாடா ஆகிய மாநிலங்கள் குலுக்கலில் பங்குபற்றவில்லை.


கடந்த சனவரி முதல் எவரும் ஜாக்பொட் பரிசைத் தட்டிச் செல்லவில்லை. இந்தப் பரிசுக்காக இது வரையில் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்களச் செலவழித்துள்ளனர்.


ஒவ்வொரு பரிசாளரும் கிட்டத்தட்ட 213 மில்லியன் டாலர்களைப் பரிசாகப் பெறுவர். இவர்கள் தமது முழுப் பணத்தையும் 26 ஆண்டுத் தவணைகளில் பெறலாம், அல்லது ஒரே தடவையில் குறைந்தளவு பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். 176 மில்லியன்களில் ஒருவருக்கே குலுக்கலில் வெற்றி பெறுவதற்குச் சந்தர்ப்பம் உள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


கடைசியாக 2007 ஆம் ஆண்டில் 390 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகையாக இரண்டு பேருக்குக் குலுக்கலில் கிடைத்தது.


மூலம்

[தொகு]