உள்ளடக்கத்துக்குச் செல்

அத்தியாவசிய பொருட்களுடன் சர்வதேச பயணிகள் கப்பல் காசா நோக்கிப் பயணம்

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், மே 25, 2010


பாலஸ்தீனத்தின் ஒருபகுதியான காசா நகரை இசுரேல் ஆக்கிரமித்துள்ளது. இதனைக் கண்டித்து சர்வதேச அறவழிப் போராட்டக்காரர்கள் 750 பேருடன் 8 கப்பல் கலங்கள் துருக்கி தலைநகர் இசுதான்புல்லிருந்து கடந்த 22ஆம் தேதி புறப்பட்டு சென்றது. இதனை அனுமதிக்கப்போவதில்லை என்று இசுரேல் எச்சரித்துள்ளது.


சுதந்திரம் புலோடில்லா என்று பெயரிடப்பட்டுள்ள அதில் சர்வதேச ஊடகவியாலர்களுடன், 10,000 டன் அத்தியாவசியப் பொருட்களும் ஏற்றிச்செல்லப்படுகின்றன.


60 நாடுகளிலிருந்து 750 போராட்டக்காரர்களில் 44 பேர் அதிகாரிகளும், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரபு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் பத்து அல்ஜீரிய உறுப்பினர்களும் செல்கின்றனர்.


இதே போன்ற போராட்டத்தை கடந்த 2008 ஆகஸ்டில் 17 நாடுகளைச் சேர்ந்த 44 பேர் சைப்ரஸிலிருந்து இரண்டு சிறிய விசைப்படகில் புறப்பட்டு காசா சென்றடைந்தனர். ஆனால் டிசம்பர் 2009ல் உதவிப் பொருட்களுடன் சென்ற கப்பலை இசுரேல் இராணுவம் மறித்து கப்பலுக்கு சேதத்தை ஏற்படுத்தியது.


காசா ஆக்கிரமிப்பை இசுரேல் உடனடியாக கைவிடவேண்டும் என்று சர்வதேச சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. ஆக்கிரமிப்பினால் அங்குள்ள மக்களுக்குத் தேவையான மருந்துப்பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.


பாலஸ்தீனத்தில் அமைந்துள்ள காசா பகுதி ஹமாஸ் ஆட்சியின் கீழ் உள்ளது. பொது ஒட்டெடுப்பின் கீழ் அங்குள்ள பொதுமக்கள் ஹமாஸைத் தேர்ந்தெடுத்தனர். இதனை அமெரிக்க ஏற்றுக்கொள்ளவில்லை.

மூலம்

[தொகு]