உள்ளடக்கத்துக்குச் செல்

பாலத்தீனர்களுடனான எந்த அமைதி உடன்பாடும் பொது வாக்கெடுப்புக்கு விடப்படும், இசுரேல் அறிவிப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, சூலை 28, 2013

பாலத்தீனர்களுடன் செய்து கொள்ளப்படும் எந்த அமைதி உடன்பாடும் பொது வாக்கெடுப்புக்கு மக்கள் முன் வைக்கப்பட வேண்டும் என இசுரேலிய அமைச்சரவை இன்று தீர்மானித்துள்ளது.


பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகுவின் அலுவலகம் விடுத்துள்ள ஓர் அறிக்கையில், "இவ்வாறான ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முடிவுக்கு மக்களின் அங்கீகாரம் தேவை" எனக் கூறியுள்ளது.


பாலத்தீனக் கைதிகளில் ஒரு தொகுதியினரை விடுவிக்கக் கோரும் சர்ச்சைக்குரிய பிரதமரின் திட்டத்தையும் அமைச்சரவை விவாதித்து வருகிறது.


அமெரிக்காவின் ஆதரவில் அமைதி உடன்பாட்டுக்கான பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாகவே இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.


அமைதிப் பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரம் அமெரிக்காவில் இடம்பெறும் என பாலத்தீனிய ஊடகங்கள் தெரிவித்திருந்தாலும், அதிகாரபூர்வமாக இது இன்னும் அறிவிக்கப்படவில்லை. 2010 ஆம் ஆண்டில் இருந்து அமைதிப்பேச்சுக்கள் தடைப்பட்டுள்ளன.


மூலம்

[தொகு]