எரிபொருளுக்கான மானியம் நிறுத்தப்பட்டதையடுத்து நைஜீரியாவில் காலவரையற்ற வேலை நிறுத்தம்

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சனவரி 10, 2012

நைஜீரியாவில் எரிபொருளுக்கான மானியம் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவற்றின் விலை இரு மடங்காக அதிகரித்துள்ளதைக் கண்டித்து நாடு முழுதும் காலவரையற்ற பணி நிறுத்தம் நடைபெறுகிறது.


நைஜீரியாவின் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைகள் அவற்றின் முழுமையான ஆற்றலுக்கு ஏற்ற வகையில் இயங்காத காரணத்தால், அங்கு சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியம் இறக்குமதி செய்யப்பட்டே விற்பனையாகிறது. அவை உள்ளூரில் மானிய விலையில் விற்கப்படுகின்றன. இதற்காக செலவாகும் பில்லியன் கணக்கான டாலர்களை வறியவர்களுக்கான உதவித்திட்டங்களின் பிரயோகித்தால், சுகாதாரம், கல்வி உட்பட பல விடயங்களில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என்று அரசாங்கம் கூறுகின்றது. ஆனால், ஊழல் காரணமாக, தமக்கு கூறப்படுகின்ற நிவாரணத்தைத் இந்த மறுசீரமைப்புத் திட்டம் தராது என்று சாதாரண நைஜீரியர்கள் நம்புகிறார்கள்.


இந்த திட்டத்தின் எதிர்ப்பாளர்கள், இந்த சீர்திருத்தத்தை அமெரிக்காதான் வலியுறுத்துகிறது என்று கூறுவதுடன், அதனை எப்படியாவது எதிர்க்கப் போவதாகக் கூறுகிறார்கள்.


இதனிடையே தெற்கு நைஜீரியாவில், பெனின் நகரில் ஆர்ப்பாட்டத்தின் போது முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றை கூட்டம் ஒன்று எரித்ததில் 10 பேர் காயமடைந்தனர். கடும்போக்கு இசுலாமியக் குழுவான போக்கோ ஹராமால் தேவாலயங்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகின்றது.


மூலம்[தொகு]