உள்ளடக்கத்துக்குச் செல்

நைஜீரியாவில் இசுலாமியத் தீவிரவாதிகளின் தாக்குதலில் 59 மாணவர்கள் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், பெப்பிரவரி 26, 2014

நைஜீரியாவின் வடமேற்கே உணவுறைப் பள்ளி ஒன்றில் நேற்றிரவு போக்கோ அராம் இசுலாமியக் குழுவினர் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 59 மாணவர்கள் சுடப்பட்டும், எரியூட்டப்பட்டும் கொல்லப்பட்டனர்.


"சில மாணவர்களின் உடல்கள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளன," என காவல்துறை ஆணையாளர் சனூசி ருபாயி தெரிவித்தார். நைஜீரியாவின் யோபே மாநிலத்தில் நடுவண் அரசு நிருவகிக்கும் பூனி யாடி என்ற ஓர் இடைநிலைப் பள்ளியொன்றே தாக்குதலுக்குள்ளானது.


இறந்தவர்கள் அனைவரும் ஆண்கள் எனவும், பாடசாலையின் 29 கட்டடங்களும் எரிந்து சேதமடைந்தன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


வடக்கு நைஜீரியாவில் இசுலாமிய நாடு ஒன்றை அமைக்கப்போராடி வரும் இசுலாமியப் போராளிகளின் தாக்குதலில் இதுவரை பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.


போக்கோ அராம் என்பது "மேற்குலகக் கல்வி ஒரு பாவச்செயல்" என அர்த்தமாகும். கடந்த காலங்களில் இவர்கள் பாடசாலைகள் பலவற்றைத் தாக்கியுள்ளார்கள்.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]