உள்ளடக்கத்துக்குச் செல்

சோமாலியத் தலைநகரில் நாடக அரங்கில் குண்டுவெடிப்பு, பலர் உயிரிழப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

புதன், ஏப்பிரல் 4, 2012

சோமாலியாவின் தலைநகர் மொகதிசுவில் புதிதாகத் திறக்கப்பட்ட நாடக அரங்கு ஒன்றில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பு ஒன்றில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர். அரங்கில் இடம்பெற்ர நிகழ்வு ஒன்றில் தற்கொலைக் குண்டு வெடித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


கொல்லப்பட்டவர்களில் சோமாலிய அமைச்சர் ஒருவரும், விளையாட்டுத்துறைப் பிரமுகர் ஒருவரும் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர் என தேசியத் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. வேறும் பல முக்கிய பிரமுகர்களும் கொல்லப்பட்டதாக பிபிசிச் செய்தி வெளியிட்டுள்ளது. சோமாலியத் தொலைக்காட்சி செய்தியாளர்கள் மூவர் காயமடைந்துள்ளனர்.


உள்நாட்டுப் போரை அடுத்து 1990களில் மூடப்பட்ட இந்த அரங்கம் மீளப் புனரமைக்கப்பட்டு கடந்த மாதமே திறந்து வைக்கப்பட்டது.


கடந்த ஆண்டு இறுதியில் தலைநகரில் இருந்து அல்-சபாப் போராளிக் குழுவினர் ஆப்பிரிக்க ஒன்றியப் படையினரால் வெளியேற்றப்பட்டனர்.


மூலம்

[தொகு]