உள்ளடக்கத்துக்குச் செல்

சென்னை அருகே படகொன்று கவிழ்ந்ததில் 22 பேர் உயிரிழப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், திசம்பர் 26, 2011

சென்னை அருகே உள்ள பழவேற்காடு ஏரியில் சுற்றுலாப் படகொன்று கவிழ்ந்ததில் 22 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் அனைவரும் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.


பழவேற்காடு ஏரியில் படகொன்று

கிறிஸ்துமஸ் விடுமுறை தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பழவேற்காடு முகத்துவாரப் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. படகில் 25க்கும் மேற்பட்டோர் இருந்ததாகவும் கூறப்படுகிறது. படகு பாரம் தாங்க முடியாமல், ஏரியின் நடுவில் கவிழ்ந்தது. 22 பேர் நீர்ல் மூழ்கி உயிரிழந்தனர். 3 குழந்தைகளை மட்டுமே மீன்பிடிப் படகுகளால் உயிருடன் மீட்கமுடிந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மீட்புப் பணியில் தீயணைப்பு படையினர், நீச்சல் வீரர்கள், காவல்துறையினர், பொதுமக்கள் என பலரும் ஈடுபட்டுள்ளனர்.


திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரி சுற்றுலாத் தலமாகும். அபாயகரமான ஏரியும் கூட. இருப்பினும் பலரும் இங்கு சுற்றுலா சவாரியாக படகுச் சவாரி செய்வது வழக்கம் எனத் தெரிவிக்கப்படுகிறது.


மூலம்

[தொகு]