உள்ளடக்கத்துக்குச் செல்

இன்னும் நான்கு ஆண்டுகளில் டோக்கியோவில் பெரும் நிலநடுக்கம் ஏற்படும் 'சாத்தியம்'

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சனவரி 24, 2012

சப்பானியத் தலைநகர் டோக்கியோவில் அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் 7.0 ரிக்டர் அளவுக்கு மேல் பெரும் நிலநடுக்கம் ஏற்படும் சாத்தியக்கூறுகள் 75% அளவில் காணப்படுவதாக டோக்கியோ பல்கலைக்கழ்க ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.


ஆனாலும் அடுத்த 30 ஆண்டுகளுக்குள் 70% அளவே நிலநடுக்கச் சாத்தியம் உள்ளதாக சப்பானிய அரசு தெரிவித்து வருகின்றது. கடைசியாக 1923 ஆம் ஆண்டில் 7.9 ரிக்டர் அளவு நிலநடுக்கம் டோக்கியோவில் ஏற்பட்டதில், 100,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.


2011 மார்ச் 11 இலிருந்து தலைநகரில் ஏற்பட்டு வரும் நில அதிர்வுகளின் எண்ணிக்கையைக் கொண்டே ஆய்வாளர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர். வழக்கத்தை விட இக்காலப் பகுதியில் ஐந்து மடங்கு அதிகமான நில அதிர்வுகள் எற்பட்டுள்ளன என அவர்கள் தெரிவிக்கின்றனர்.


மனித சேதம் எவ்வளவு இருக்கும் என்பதை எதிர்வு கூறுவது கடினம் எனத் தெரிவித்துள்ள இவர்களில் அறிக்கை, அரசாங்கமும், தனிப்பட்டவர்களும் முன்கூட்டியே பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ல வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.


சப்பான் பசிபிக் எரிமலை வளையத்தில் அமைந்துள்ளதால், அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நாடுகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.


மூலம்

[தொகு]