உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கையில் ஒருபாலுறவுக்கு ஆதரவாகக் குரல்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

சனி, சூன் 26, 2010

இலங்கையில் ஒருபாலுறவு குற்றவியல் சட்டத்திலிருந்து அகற்றப்பட வேண்டும் என்றும் ஒருபாலுறவை சட்ட பூர்வமானதாக்க வேண்டும் என்றும் அங்கு செயற்படுகின்ற ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான அமைப்பு ஒன்று கோரியுள்ளதாக பிபிசி தெய்தியாளர் தெரிவித்துள்ளார்.


Companion on a journey என்ற பெயரில் இயங்கும் ஒருபாலுறவுக்காரர்களுக்கான ஓர் அமைப்பு இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.


இலங்கையைப் பொறுத்தவரை ஒருபாலுறவு என்பது அங்கு இன்றுவரை சட்ட விரோதச் செயலாக இருந்துவருகிறது.


"1883ல் பிரித்தானியர்கள் இலங்கையில் அறிமுகப்படுத்திய ஒரு சட்டம் ஒருபாலுறவை குற்றச் செயலாகக் காண்கிறது. ஆனால் காலத்துக்கு ஒவ்வாத இந்த சட்ட விதியை அகற்ற வேண்டும். ஒருபாலுறவுக்காரர்கள் குற்றவாளிகள் அல்ல." என்று கூறுகிறார் இலங்கையில் ஒருபாலுறவுக்காரர்களுக்காக குரல் கொடுத்துவரும் ஷெர்மன் டெ றோஸ்.


இதற்கிடையே, இலங்கையில் உள்ள ஒருபாலுறவுக்காரர்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க தான் தயாராக இருப்பதாகவும், அதேவேளை அவர்கள் விடயத்தில் எடுக்கக்கூடிய எந்தவொரு முடிவும் நாட்டின் கலாச்சாரத்தை பாதிக்கும் வகையில் அமையக் கூடாது என்றும் இலங்கை பிரதமர் டி. எம். ஜயரட்ன கூறியுள்ளார்.

மூலம்

[தொகு]