வடக்கு சூடான் இராணுவம் எல்லை நகரைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, மே 22, 2011

தெற்கு சூடானுடனான எல்லையில் அமைந்திருக்கும் அபியெய் என்ற நகரைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருப்பதாக வடக்கு சூடானிய இராணுவம் அறிவித்துள்ளது. இதனை ஐநாவும் உறுதி செய்துள்ளது.


அபியெய் பகுதி மஞ்சளில் காட்டப்பட்டிருக்கிறது.

கடந்த மூன்று நாட்களாக வடக்கு மற்றும் தெற்கு சூடானிய இராணுவத்தினரிடையே இடம்பெற்றுவந்த கடும் சண்டையை அடுத்து அபியெய் நகரில் இருந்து எதிரிகளை விரட்டி விட்டோம் என சூடானிய அரசுத் தொலைக்காட்சி அறிவித்தது.


எண்ணெய் வளம் மிக்க இப்பகுதி வடக்கு - தெற்கு சூடான்களுக்கிடையே எதிர்காலத்தில் பெரும் சர்ச்சைக்குரிய இடமாக மாறலாம் என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.


எதிர்வரும் சூலை மாதத்தில் தெற்கு சூடான் அதிகாரபூர்வமாக சூடானிடம் இருந்து விடுதலை பெற இருக்கிறது. ஆனாலும் அபியெய் நகரை இரு பகுதிகளும் உரிமை கொண்டாடி வருகின்றன.


"சூடானிய இராணுவம் அபியெய் நகருக்குள் ஊடுருவி விட்டது," என தெற்கு சூடானிய மக்கள் விடுதலை இராணுவத்தின் பேச்சாளர் பிலிப் அகுவெர் தெரிவித்தார். "அங்கு இன்னும் சண்டை நடைபெற்று வருகிறது, ஆனால் அவர்கள் தாங்கிகளுடன் எம்மைத் தாக்குகின்றனர்," என்றார்.


சூடானில் தற்போது தங்கியிருக்கும் ஐநா பாதுகாப்புச் சபைப் பிரதிநிதிகள் திங்களன்று அபியெய் செல்லவிருக்கின்றனர்.


மூலம்[தொகு]