உள்ளடக்கத்துக்குச் செல்

ருவாண்டா ஆயுதக்குழுத் தலைவர்கள் ஜெர்மனியில் கைது

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், நவம்பர் 17, 2009


கொங்கோ மக்களாட்சிக் குடியரசின் கிழக்கு பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஊட்டு இன ருவாண்டா ஆயுதக்குழுவொன்றின் தலைவர்களை ஜெர்மனியக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


எப்.எல்.டி.ஆர் என்ற ருவாண்டாவின் விடுதலைக்கான மக்களாட்சிப் படைகளின் தலைவரான இக்னஸ் முர்வனாஷ் யாக்கா என்பவரும் அவருக்கு அடுத்த நிலையிலிருந்த ஸ்டட்டன் முசோனியும் மனித குலத்துக்கு எதிரான குற்றச்செயல்கள் மற்றும் பயங்கரவாத குற்றச்செயல்கள் தொடர்பான சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.


ஜெர்மனியிலிருந்து ஆயுதக்குழு நடவடிக்கைகளை நெறிப்படுத்தியதாக முர்வனாஷ் யாக்கா மீது ஐ.நா குற்றஞ்சாட்டியிருந்தது.


1994 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 800,000 மக்கள் குறிப்பாக துட்சி இனத்தவர்கள் உயிரிழக்கக் காரணமான ருவாண்டா இனப்படுகொலையை அடுத்து இந்த அமைப்பு கொங்கோவுக்கு இடம்மாறியமை குறிப்பிடத்தக்கது.


எப்டிஎல்ஆர் அமைப்பின் ஆயுதக்குழுக்களுடன் கொங்கோ இராணுவம் சண்டையிட்டு வருகிறது. இராணுவத்திற்கு ஆதரவாக ஐநா படைகள் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த சனவரி முதல் இந்நடவடிக்கை இடம்பெற்று வந்தாலும், இன்னமும் ஆயுததாரிகளின் நடமாட்டம் அங்கு இருந்து வருகிறது.


மூலம்

[தொகு]