தென்மேற்கு சீனாவில் நிலநடுக்கங்கள், பலர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, செப்தெம்பர் 7, 2012

தென்மேற்கு சீனாவில் இடம்பெற்ற தொடர் நிலநடுக்கங்களில் குறைந்தது 43 பேர் உயிரிழந்தனர், மேலும் 150 பேர் காயமடைந்தனர் என அரசு ஊடகங்கள் அறிவித்துள்ளன.


யூனான் மற்றும் கீசூ மாகாணங்களின் எல்லைப்பகுதிகளில் இன்று பகல் 11:19 (பெய்ஜிங்கு நேரம்) அளவில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் இரண்டு நிலநடுக்கங்களை 5.6 அளவாகப் பதிந்துள்ளது.


யூனான் மாகாணத்தில் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். 20,000 வீடுகள் வரையில் தேதமடைந்தன. இறந்தவர்கள் அனைவரும் யூனான் மாகாணத்தின் யிலியாங் நகரைச் சேர்ந்தவர்கள் என அரசுப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.


மூலம்[தொகு]