தென்மேற்கு சீனாவில் நிலநடுக்கங்கள், பலர் உயிரிழப்பு
Jump to navigation
Jump to search
சீனாவில் இருந்து ஏனைய செய்திகள்
- 7 ஜனவரி 2018: ஈரானிய எண்ணெய் கப்பல் சீன சரக்கு கப்பலுடன் மோதியதில் 32 பேரை காணவில்லை
- 16 டிசம்பர் 2016: அமெரிக்காவின் ஆளில்லா இயக்க நீர்மூழ்கியை தென் சீனக் கடலில் சீனா கைப்பற்றியது
- 13 அக்டோபர் 2016: சீனா: 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 22 பேர் பலி
- 2 சூன் 2015: சீனாவில் யாங்சி ஆற்றில் கப்பல் கவிழ்ந்ததில் 456 பேர் மூழ்கினர்
- 9 ஏப்ரல் 2015: தைவான் முன்னாள் அதிபருக்கு ஆயுள் தண்டனை
சீனாவின் அமைவிடம்
வெள்ளி, செப்டம்பர் 7, 2012
தென்மேற்கு சீனாவில் இடம்பெற்ற தொடர் நிலநடுக்கங்களில் குறைந்தது 43 பேர் உயிரிழந்தனர், மேலும் 150 பேர் காயமடைந்தனர் என அரசு ஊடகங்கள் அறிவித்துள்ளன.
யூனான் மற்றும் கீசூ மாகாணங்களின் எல்லைப்பகுதிகளில் இன்று பகல் 11:19 (பெய்ஜிங்கு நேரம்) அளவில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் இரண்டு நிலநடுக்கங்களை 5.6 அளவாகப் பதிந்துள்ளது.
யூனான் மாகாணத்தில் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். 20,000 வீடுகள் வரையில் தேதமடைந்தன. இறந்தவர்கள் அனைவரும் யூனான் மாகாணத்தின் யிலியாங் நகரைச் சேர்ந்தவர்கள் என அரசுப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
மூலம்[தொகு]
- Earthquakes shake south-west China's Yunnan, பிபிசி, செப்டம்பர் 7, 2012
- Quakes in southwest China kill at least 43, மோர்னிங் போஸ்ட், செப்டம்பர் 7, 2012