பிலிப்பீனிய அரசு இசுலாமியப் போராளிகளுடன் அமைதி ஒப்பந்தம்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, அக்டோபர் 7, 2012

பிலிப்ப்பீன் அரசு அந்நாட்டின் மிகப் பெரும் இசுலாமியப் போராளிக் குழுவுடன் அமைதி உடன்பாட்டை எட்டியுள்ளதாக பிலிப்பீனிய அரசுத்தலைவர் பெனினோ அக்கீனோ அறிவித்துள்ளார்.


40 ஆண்டுகள் இனப்போரை முடிவுக்குக் கொண்டு வரும் முகமாக மோரோ இசுலாமிய விடுதலை முன்னணி (MILF) என்ற போராளிக்குழவுடன் இவ்வுடன்பாடு எட்டப்பட்டது. இது வரை இடம்பெற்ற போரில் 120,000 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.


கத்தோலிக்கர்களை பெரும்பான்மையாகக் கொண்டுள்ள பிலிப்பீன்சு நாட்டில் அதன் தெற்கே முசுலிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட புதிய சுயாட்சிப் பிராந்தியம் அமைக்கப்படும். இந்த உடன்பாடு தமக்குத் திருப்தி அளிப்பதாக போராளிகளின் பேச்சாளர் கூறினார்.


இரு தரப்புக்கும் இடையே மலேசியாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து இந்த உடன்பாடு எட்டப்பட்டது. இவ்வுடன்பாடு அடுத்த வாரம் பிலிப்பீன்சு தலைநகர் மணிலாவில் சம்பிரதாயபூர்வமாகக் கையெழுத்திடப்படும்.


புதிய சுயாட்சிப் பிரதேசம் பாங்சமோரோ எனப் பெயரிடப்படும். மோரோ இன மக்கள் அங்கு வாழ்கின்றனர். அரசுத்தலைவர் அக்கீனோவின் பதவிக்காலம் 2016 ஆம் ஆண்டு முடிவதற்குள் இவ்வொப்பந்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மூலம்[தொகு]