கானாவில் பல்லடுக்கு வணிக வளாகம் இடிந்து வீழ்ந்ததில் பலர் உயிரிழப்பு
Appearance
உகாண்டாவில் இருந்து ஏனைய செய்திகள்
- 9 நவம்பர் 2012: கானாவில் பல்லடுக்கு வணிக வளாகம் இடிந்து வீழ்ந்ததில் பலர் உயிரிழப்பு
- 22 செப்டெம்பர் 2012: மோதல்களை அடுத்து ஐவரி கோஸ்ட் கானாவுடனான எல்லைகளை மூடியது
- 3 சூன் 2012: கானாவில் சரக்கு விமானம் பேருந்து மீது வீழ்ந்ததில் 10 பேர் உயிரிழப்பு
- 23 திசம்பர் 2011: கால்பந்து 2010: காலிறுதிப் போட்டியில் உருகுவே அணி கானாவை வென்றது
- 23 திசம்பர் 2011: கால்பந்து 2010: கானா அமெரிக்காவை வென்று கால் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது
கானாவின் அமைவிடம்
வெள்ளி, நவம்பர் 9, 2012
கானாவின் தலைநகர் ஆக்ராவில் பல்லடுக்கு வணிக வளாகம் ஒன்று இடிந்து வீழ்ந்ததை அடுத்து இடிபாடுகளில் இருந்து இது வரையில் 78 பேர் வெளியே இழுத்து எடுக்கப்பட்டனர். இவர்களில் 9 பேர் இறந்த நிலையிலும், 69 பேர் உயிருடனும் மீட்கப்பட்டனர்.
மேலும் பலர் இடிபாடுகளிடையே அகப்பட்டுள்ளனர் எனவும் அவர்களைத் தேடும் பணியில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வாண்டின் ஆரம்பத்தில் கட்டப்பட்ட இந்த வணிக வளாகம் இடிந்து வீழ்ந்ததற்கு கட்டுமானத்தில் இடம்பெற்ற பெரும் தவறுகளே காரணம் எனக் கூறப்படுகிறது.
மூலம்
[தொகு]- Melcom shop collapse in Ghana: Voices heard in rubble, பிபிசி, நவம்பர் 9, 2012
- Ghana steps up search for survivors in mall rubble, ராய்ட்டர்சு, நவம்பர் 8, 2012